சிறு தயாரிப்பாளர்களுக்கு,
புதிய, மத்திம நாயகர்களுக்கு,
புதிய அலை இயக்குநர்களுக்கு,
திரையரங்குகளும் கிடைப்பதில்லை.
ஓடிடி இணையங்களும் இல்லை.
தொலைக்காட்சி சேனல்களும் இல்லை.
படத்தை எடுத்து வைத்து கொண்டு கோடம்பாக்கத்தின் வீதிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வேண்டியிருக்கிறது.
ஓட ஓட சினிமாவை விரட்டுகிறார்கள்,
முட்டி மோதி மண்டை உடைந்து தெருவில் கிடக்க வேண்டும்.அது தான் அவர்களின் எதிர்பார்ப்பு.
பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் ,
பெரிய கதாநாயகர்களுக்கு மட்டுமே எல்லா கதவுகளும் திறக்குமென்றால் இங்கே ஜனநாயகம் எங்கேயிருக்கிறது.?
நல்ல திரைப்படம்,
அழகான கவித்துவமான கதை,
நல்ல திரைக்கதை
என்பதெல்லாம் பேச்சேயில்லை.
பெரு நிறுவனப்படங்களை
பெரிய நடிகர்களின் திரைப்படங்களை மட்டுமே வாங்குவோம் மற்றவர்களெல்லாம் வெளியேறுங்கள் என்கிறது நெட்பிலிக்ஸ் போன்ற இணையங்களும், தொலைக்காட்சி சேனல்களும்,திரையரங்குகளும்.
சொந்த நாட்டிலே அகதியாக நிற்பது போன்ற ஒரு நிலை.
நான்கு வருடங்களாக படம் இயக்க முடியாத நிலை.
இயக்கினாலும் எங்கே விற்பது ?
யாரிடம் சென்று கையேந்தி நிற்பது ?
யார் வாங்குவார்கள் ?
எங்கு திரையரங்கு கிடைக்கும்
என்றொரு பரிதாபமான நிலை எனக்கு மட்டுமில்லை
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் தொண்ணூறு சதவீதத்தினரின் நிலமை இதுவே.
நெட்பிலிக்ஸ் எல்லா ஆண்டுகளும் புதிய படங்களை, சிறிய படங்களை, நல்ல இயக்குநர்களின் திரைப்படங்களைப் புறக்கணிக்கிறது.
போன ஆண்டு நெட்பிலிக்ஸ் வாங்கிய திரைப்படங்களின் தரங்களை நீங்களே இணையத்தில் தேடிப்பாருங்கள்.
ஒரு சிறு தயாரிப்பாராக தேசிய விருது பெற்ற இயக்குநராக நெட்பிலிக்ஸ்க்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்.
நேற்று எழுத்தாளர் சயந்தன் அவர்களைச் சந்தித்து அவரின் புதிய நாவலான திசை ஒன்பது பெற்றுக் கொண்டேன்.
ஆறாவடு எனக்கு விருப்பமான நாவல்.
இரவுணவுக்கிடையே நீண்ட இலக்கிய உரையாடல். அவர் எழுத வந்த காலம், இலங்கை சூழ்நிலை, சமகால இலக்கிய சூழல் ,இன்றைய திரை சூழல் என உரையாடல் விரிந்தது.
சயந்தனுக்கு வாழ்த்துகள்
கடந்த ஞாயிறு மும்பையில் நடந்த NEXA INDIAN Steaming Academy Awards விழாவில் தலைமைச் செயலகம் இணையத்தொடர் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை என இரண்டு விருதுகளை வென்றது.பாலிவுட் தவிர மற்ற மாநில மொழி தொடர்களுக்கான போட்டிப்பிரிவில் இந்த இரண்டு விருதுகளை தலைமைச்செயலகம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
விருது வழங்கிய Nexa Indian steaming academy award நிறுவனத்திற்கும், விருதுக்குக் காரணமான ZEE5 நிறுவனத்திற்கும் , Radaan நிறுவனத்தின் Radikaa Sarathkumar அவர்களுக்கும், சிறந்த தொடர் என்று பாராட்டிய பத்திரிகைகளுக்கும், பார்வையாளர்களுக்கும் என் நன்றிகள்.

A special presence tonight as @dir_vasanthabalan graced the event.
#IndianStreamingAcademyAwards #NEXA #NEXAExperience #CreateInspire #StreamingAwards #ISAA