ACTOR JAVA SUNDARESAN

@actor_java_sundaresan

எண்ணத்தின் உயரமே நம்முடைய உயரம்
Followers
124k
Following
144
Account Insight
Score
44.52%
Index
Health Rate
%
Users Ratio
861:1
Weeks posts
அஜித் குமார் சார் நடித்த Campa கூல்டிரிங்ஸ் விளம்பரத்தில் என் மகன் யோஹனும் நடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. வாய்ப்பளித்த இயக்குனர் சிறுத்தை சிவா சார் அவர்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்... 🙏❤️ #campa #AjithAd #AjithCampaAd #yohan #javasundaresan
32.9k 161
1 month ago
மே மாதம் 1ம் தேதி குரோம்பேட்டையில் "CHROME INDOOR SPORTS ARENA" வின் திறப்பு விழா சிறப்பாக நடந்தது. இதில் நான் கலந்து கொண்டு பேசிவிட்டு அப்படியே கெஸ்டாக வந்த கலெக்டர் திரு மேகநாத ரெட்டி சாருடன் இணைந்து அங்கு பயிற்சி பெறும் குழந்தைகள் இருவருடன் சேர்ந்து ஒரு சாம்பிள் ஆட்டம் ஆடினோம். இன்னொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கேரமில் அர்ஜுனா அவார்டு வாங்கிய திரு மரிய இருதயம் சார் ஆட்டத்தின் போது எங்களுக்கு சில நுணுக்கங்களை சொல்லித் தர நானும் கலெக்டரும் அதை பின்பற்றி ஒரே ஷாட்டில் காயினை போட்டு எல்லோரையும் புல்லரிக்க வைத்தோம். விளையாட்டை முழுமூச்சாக எடுத்துக்கொண்டு பயிற்சி பெறும் குழந்தைகள் உலக அளவில் சாதிப்பதோடு அரசாங்க வேலை வாய்ப்புகளில் முன்னுரிமையும் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு இந்த CISA சிறப்பாக உதவி புரிகிறது. #indoorgames #CISA #chrompet #openingceremony #ChiefGuest
398 2
1 day ago
சொல்லி வச்சு - வெற்றியை கில்லி மாதிரி அள்ளி எடுத்த TVK தலைவர் விஜய் சாருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இனி உங்கள் ராஜ்ஜியம் தான் CM விஜய் சார். உங்களுடைய அசத்தலான ஆட்சியைக் காண I AM WAITING... தமிழகத்தை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று நிரந்தரமாக மக்கள் நெஞ்சில் குடியிருங்கள் சார். ❤️🙏👍🎉 #Tvk #TNElection #voters #victory #cmvijay #tamilnadupolitics #thalapathyvijay #thalapathy #thalapathyfans
54.3k 86
12 days ago
இன்று #worlddanceday .... விரைவில் வரப்போகிற "கிரேசி காதல்" திரைப்படத்தில் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் ரசிகனாக நடிக்கிறேன். ஆங்காங்கே அவருடைய புகழ்பெற்ற சில பாடல்களுக்கு ஆடி இருக்கிறேன்... இந்த பாடல் "காதலிக்க நேரமில்லை" படத்தில் வந்த சூப்பர் ஹிட் பாடல். படத்தை தனது நண்பர்களோடு தயாரிப்பது பழம் பெரும் நடிகர் திரு.ஜெய்சங்கர் அவர்களின் புதல்வர் சஞ்சய் ஜெய்சங்கர் என்பது கூடுதல் சுவாரசியம் ! #crazykadhal #javasundaresan
795 46
17 days ago
குடும்பத்துடன் வாக்களித்து விட்டோம்😄 #2026 #2026tamilnaduelection
77.5k 148
23 days ago
2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேர்தல் நாள் : 23.04.2026 நல்லாட்சி மலரட்டும் நல்லது நடக்கட்டும் நாடு செழிக்கட்டும் #dmk #aiadmk #ntk #tvk #assemblyelection2026
2,963 201
25 days ago
Trailer link in story and bio....
362 10
27 days ago
இனி நல்லதே நடக்கட்டும் அது நல்லாவே நடக்கட்டும்... 🤝😊❤️🙏 #இனியதமிழ்புத்தாண்டு #HappyTamilNewYear
137 19
1 month ago
சமீபத்தில் ஸ்ரீ புத்தா வித்யா மந்திர் பள்ளிக்கு விருந்தினராக சென்று வந்தேன்.. மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சர்டிபிகேட் கொடுக்கும் நிகழ்வு முடிந்த பிறகு... அவர்களின் ஆடல் பாடல் மற்றும் பல திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தது.. மாணவச் செல்வங்கள் அசத்திக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த உற்சாகமான நான் கிளம்புவதற்கு முன் என் பங்குக்கு ஒரு ஆட்டத்தை போட்டு விட்டு வந்தேன்... பிள்ளைகள் தாங்கள் பிராக்டிஸ் பண்ணதையும் செய்ய முடியாமல் நான் ஆடிய தாறுமாறான தப்பாட்டத்திற்கு ஈடு கொடுக்கவும் முடியாமல் குழம்பி போய் நின்றதைப் பார்த்து எனக்கும் சிரிப்பு... என் தர்ம ஆட்டத்தை பார்த்து அவர்களுக்கும் சிரிப்பு... மேற்கொண்டு நடக்க போகும் நிகழ்ச்சிகளுக்கு என்னால் இது போன்ற எந்த குந்தகமும் விளைந்துது விடக்கூடாது என்ற பய உணர்ச்சியோடு பிரின்ஸ்பால் என்னை பத்திரமாக கார் ஏற்றி வழி அனுப்பினார்... காருக்குள்ளே மூவ்மென்ட்டுகள் போட்டபடி வீடு வந்து பாதத்தில் பாமாயில் தடவிக் கொண்டு படுக்கப் போனேன். பிரபுதேவா மாஸ்டர் உடன் நான் ஒண்டிக்கு ஒண்டி மோதும் போட்டி நடனம் கனவுகளை ஆக்கிரமித்தது.?!?!?! 😜😄🙏🤝❤️
159 3
1 month ago
"தீயோர் கூடம்" படத்தின் FIRST LOOK ஐ "தேனிசை தென்றல்" தேவா சார் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார்... சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை கந்தகோட்டை படத்தை எடுத்த இயக்குனர் @directorsakthi சார் இயக்கி இருக்கிறார். ரொம்ப நாட்களாக பலரும் என்னிடம் "நீங்க ஒரு சீரியஸான வில்லத்தனமாகவோ குணச்சித்திர வேடங்களிலோ நடித்தால் என்ன?" என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதற்கு இந்த படம் பதில் சொல்லும். வித்தியாசமான ஜாவா சுந்தரேசனை பார்ப்பீர்கள். என்னை இந்த கோணத்தில் பார்க்க ஆசைப்பட்ட இயக்குநர் சக்திவேல் சாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும். எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்த படம். விரைவில் வெளிவருகிறது... #theeyorkoodam #javasundaresan #suspense #thriller #tamilmovie
173 6
1 month ago
அடியேன் இரட்டை வேடங்களில் நடித்த விளம்பரம்... நேற்று முதல் சோசியல் மீடியாக்களில்... இயக்கம் : கவியரசு @feniceshield ஒளிப்பதிவு : Naga Saravanan #feniceshieldpaint #javasundaresan #paint #painting #feniceshield
218 16
1 month ago
ஒரு விளம்பர படப்பிடிப்பின் போது கேரவனில் பாகவதர் கெட்டப் போட்டு ரெடியாகி கொண்டிருந்த லொள்ளு சபா சுவாமிநாதன் சாரோடு ஒரு லூட்டி... ரசிக்க சிரிக்க இவர் தனது சினிமா அனுபவங்களை சொல்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்... என்னுடைய ஒரிஜினல் பேரும் இவர் பேரும் ஒன்று என்பது எங்கள் நட்பிற்கு ஒரு கூடுதல் சுவாரசியம் தருகிறது.!!!!! #javasundaresan #lollusabhaswaminathan #funmoment #shootingspot #comedian
798 23
1 month ago